Completed In Progress

Completed Projects
 

1. தமிழ் பிறந்தநாள் பாடல் - Tamil Birthday Song
 

தமிழ் மக்கள் அனைவரும் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் ஆனால் தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் இல்லை என்ற குறையைப் போக்க வலைத்தமிழ் நிறுவனர் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலப்பாடலைக் கொண்டு நாலும் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்களில் தமிழ்ப்படுத்துதல் அவசியம் என்ற நோக்கில், பாவலர் அறிவுமதி அவர்கள் 2014-ல் அமெரிக்காவின் வாசிங்டன் டிசி வந்திருந்தபோது அவரிடம் உரையாடுகையில் தமிழில் ஒரு பிறந்தநாள் பாடலை கொண்டுவரவேண்டும் என்று கேட்க, பாவலர் அறிவுமதி அவர்கள், தான் ஏற்கனவே எழுதி மெட்டமைத்துள்ள ஒரு பாடலை பாடிக்காட்ட, திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் அந்தப் பாடல் வரிகள் பிடித்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்து , அதை தான் தன்னார்வலராக உள்ள வள்ளுவன் தமிழ் மையத்தின் (வெர்சீனியா) பள்ளிக் குழந்தைகளிடம் பாட ஏற்பாடு செய்தார். அதனையொட்டி சில வரிகளில் சிறு மாற்றங்களை செய்து உலக அளவில் வெளியிடலாம் என்று முடிவு செய்து தான் தயாரித்து வெளியிடுவதாக உறுதியளித்தார். அதன்படி பாவலர் அறிவுமதி அவர்கள் பாடலை தயார் செய்து அளிக்க அதனை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை (பெட்னா ) அமைப்பின் 29வது ஆண்டு நிகழ்ச்சியில் சூலை 3, 2016 அன்று நியூஜெர்சியில் உலகத் தமிழர்கள் முன்பு மிகப்பெரிய மேடையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாவலர் அறிவுமதி அவர்களின் அறிமுக உரையுடன், இப்பாடலை வெளியிட்டுப் பேசிய திரு.பார்த்தசாரதி, இனி உலகின் எந்த தமிழர் பிறந்தநாளும் இந்தப்பாடல் ஒலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாவலர் அறிவுமதி எழுதி, பசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில், பின்னணிப் பாடகர் திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் செல்வி.உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி, வலைத்தமிழ்.காம் (www.ValaiTamil.Com) ச.பார்த்தசாரதி தயாரித்து, வெளியிட்ட பிறந்தநாள் பாடல் இரண்டு வாரங்களில் உலகெங்கும் வாழும் பலகோடி தமிழர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குழந்தைகளும், பெற்றோர்களும் முனுமுனுக்கும் பாடலாக தமிழ் மக்களிடம் சென்றடைந்து அவர்களின் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்தும் ஒரு தமிழ்ப்பாடலாக மாறியது. சமூக வலைத்தளங்களில் அதிகம் மக்களால் பகிரப்பட்ட ஒரு தமிழ்ப்பாடலாக இது விளங்குகிறது. இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இந்தப்பாடலை வெளியிட்டு அங்குள்ள தமிழ்மக்களின் பிறந்தநாளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். வெளிநாட்டில் ஒருசில தமிழ்ப்பள்ளி பாடத்திட்டங்களில் இந்தப்பாடலை சேர்த்துள்ளனர்.. ஆங்கிலத்தில் பாடுவதற்கு மாற்றாக தமிழிலேயே வாழ்த்த வயது வேறுபாடு இல்லாமல், எல்லா வயதினரும் பயன்படுத்த ஒரு தமிழ்ப்பாடல் கிடைத்துவிட்டது . பாடலின் ஆழமான வாழ்த்து வரிகளும் , இசையும் , குரலும் பல ஊடங்கங்களைக் கவர்ந்ததன் விளைவாக இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டும், தொலைக்காட்சிகள் இந்தப்பாடலை தொடர்ந்து ஒளிபரப்பியும் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளன.

இந்தப்பாடல் ஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FETNA) விழாவில், சித்த மருத்துவர் கோ.அன்புகணபதி, திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சுபாஷிணி, மயிலாடுதுறை சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்பள்ளிகளில் இந்தப்பாடல் வெளியிடப்பட்டது.
 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மேடையில் முதல் வெளியீடு (நியூஜெர்சி):


வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கத்தில் வெளியீடு:


தமிழ் ஊடங்கள் வரவேற்று கொண்டாடி மக்களிடம் கொண்டு சேர்த்தது:

 

இணையதளம்: https://www.valaitamil.com/tamilbirthday/

 

 

தமிழ்நாடு அரசு 6ம் நிலை பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது:

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது:


2. தமிழ் குழந்தைப் பெயர்கள்- Tamil Baby Name
 

வலைத்தமிழ் சுமார் எட்டு ஆண்டுகள் தொகுத்து இணையத்தில் வெளியிட்ட (https://www.valaitamil.com/baby_names.php) சுமார் 46000 தமிழ்ப்பெயர்களை ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்திவருகிறார்கள். இதன் பயன்பாட்டை உணர்ந்து எளிமையாகத் தேடும் வசதியும்பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தமிழ்ப்பெயர்களை சேர்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழியக்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வலைத்தமிழ் தொகுத்த தமிழ்ப்பெயர்கள் தொகுப்பை நூலாக வெளியிட தமிழியக்கத்திற்கு வழங்கி அதை ஒரு தொகுப்பாசிரியராக பங்காற்றி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த 10-வது உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிட ஒருங்கிணைப்பு செய்தது வலைத்தமிழ் குழு.

இந்த அரிய செயலை செய்து தமிழகத்தின் இணைய வசதி இல்லாத மக்களுக்கும் தமிழ்ப்பெயர்களை கொண்டுசென்ற தமிழியக்கத்தின் நிறுவனர் கல்விக்கோ முனைவர்.கோ.விசுவநாதன் அவர்களுக்கும் புலவர்.பதுமனார் கவியருவி பேராசிரியர். அப்துல் காதர்செயலாளர் திரு.சுகுமாரன் உள்ளிட்ட அனைத்து தமிழியக்க நிர்வாகிகளுக்கும் என்னுடன் இணைந்து இந்த தொகுப்பை தமிழியக்கத்திற்கு கொண்டுசேர்த்து பங்களித்த தொகுப்பாசிரியர் திருமதி.பவளசங்கரி அவர்களுக்கும் வலைத்தமிழ் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழியக்கம் வெளியிட்ட நூல்

சூட்டி மகிழ்வோம் தூயத் தமிழ்ப்பெயரை

காணொளிகள்:

ஊடகச் செய்திகள்

 

 

 


கிருஷ்ணகிரி தமிழியக்கம் புத்தக வெளியீட்டு விழாவில் தொகுப்பாசிரியர்கள் கலந்துகொண்டபோது

நூல்களின் உள்ளே:


 
 
தொகுப்பாளர் உரை : ச.பார்த்தசாரதி

3. தமிழைத் தமிழாய் பேசுவோம்.

சூலை 2014 -ல் எழுதிய முகநூல் பதிவில், தமிழ்மக்கள் தமிழில் பேசும்போது அதிகம் ஆங்கிலம் கலந்து பேசுகிறோம், இன்றைய பன்னாட்டு சூழலின் விளைவு இது என்றாலும், இதை சரிசெய்யவும் , விழிப்புணர்வு கொண்டவர்கள் தங்களை  சரிசெய்துகொள்ளவும் Toast Master Club போன்று தமிழைத் தமிழாய்ப் பேசும் பயிற்சிக் கட்டமைப்பு வேண்டும் என்றும் 3 முதல் 6 மாதங்கள் பயிற்சி எடுக்கும் நேர்த்தியான அமைப்பு வேண்டும் என்றும் முகநூலில் பதிவிட்டு தொடர்ந்து பேசியும் , எழுதியும் வருகிறோம். ஆனால் இதுவரை எந்த  முன்னெடுப்பும் தமிழ் சமூகத்தில் ஏற்படாத நிலையில் வலைத்தமிழ் தன்னார்வக் குழு 2021ல் வட அமெரிக்காவில் இதற்கான தொடக்கவிழாவை ஏற்படுத்தி பயிற்சித் திட்டத்தை அறிவித்தது..

இன்றைய இளம் பெற்றோர்கள் ஆசிரியர்கள்பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ் ஆங்கிலம்பிறமொழி கலந்துள்ளது என்று சோதித்துப் பார்த்தால் மிகப்பெரிய வியப்பாக இருக்கும். நம் பேச்சுத்தமிழை பிறமொழிகள் குறிப்பாக ஆங்கிலம் விழுங்கிவருவது நன்கு புலப்படும்.

பிறமொழிகளிடம்குறிப்பாகஆங்கிலத்திடம் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தமிழை அதனிடமிருந்து விடுவித்துதமிழின் தூய்மையைக் காக்கவேண்டியது இன்றைய தேவை. அத்தேவையறிந்து இந்நிகழ்ச்சியை முன்னெடுத்திருக்கின்றது வலைத்தமிழ் தன்னார்வலர் குழு.

என்ன தீர்வுஎங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பதுஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறைகள் உள்ளதா

ஆகஸ்ட் 21, 2021 அன்று வட அமெரிக்காவில் மிகப்பெரிய முன்னெடுப்பாக "தமிழைத் தமிழாய் பேசுவோம்" என்ற தன்னார்வப் பயிற்சிக் கட்டமைப்பிற்கான தொடக்கவிழா நடந்தேறியது.

இளையதலைமுறை பெற்றோர்கள் நாம் சரியான தமிழை தமிழாகவும்ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளை சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.

தமிழ்ப் பள்ளிக்கு சென்று தமிழ் பேசவேண்டியது நம் குழந்தைகள் மட்டுமல்ல நாமும்தான்.. வாருங்கள்.. வழி காண்போம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுஇதற்கு வழிகாட்டுதல் குழு தமிழறிஞர் குழுவார்த்தைகளைத் தொகுத்த கையேடுஇணையதளம்59 நிமிடம் பயிற்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த /பயிற்சிபெற தொடர்புகொள்ளவும்..

 • வாராந்திர இந்த நிகழ்ச்சி 59 மணித்துளிகள் மட்டுமே நடத்தப்படும்.
 • நிகழ்ச்சியை தொடங்க 5 மணித்துளிகள்
 • அன்றைய பேச்சுத் தலைப்பு கொடுக்கப்படும். உடன் மனதில் பட்டதை தயாரிப்பு இல்லாமல் பேசவேண்டும்.
 • ஒருங்கிணைப்பாளர் பணி:
  1. நிகழ்ச்சியை சரியான நேரத்தில் தொடங்குதல்
  2. நிகழ்ச்சியின் நோக்க உறுதிமொழியை அனைவரும் வாசித்தல்
  3. நிகழ்ச்சி எப்படி அடுத்த 59 மணித்துள் எப்படி செல்லும் என்பதை குறிப்பிடுதல்.
  4. இன்றைய தலைப்பை அறிவித்தல்.
 • நிகழ்ச்சியின் வடிவம்:
  1. ஒவ்வொருவரும் 3 மணித்துளிகள் பேசமற்றவர்கள் அந்தப் பேச்சில் கலந்துள்ள ஆங்கில பிறமொழி வார்த்தைகள் அதற்கு இணையான பயன்பாட்டில் உள்ள தமிழ் வார்ந்தைகளை குறித்துக்கொள்ளுதல்.
  2. 2 நிமிடம் பேசியவரின் பேச்சை மீளாய்வு செய்து சரியான தமிழ் வார்த்தைகளை சுருக்கமாகக் குறிப்பிடுதல்.
  3. 10 பேர் × 3+2 =5 மணித்துளிகள் = 50 மணித்துளிகள்
  4. 5+50+4 =59 மணித்துளிகள் (நிறைவு செயல்பாடுகள்).
  5. ஏதும் புதிய வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளை குழுவால் அறிந்துகொள்ள முடியாவிட்டால் "தமிழைத் தமிழாய் பேசுவோம்" வழிகாட்டுகள் குழுவிற்கு இணையம் வழி தெரிவிக்கலாம். கேள்விகள் தொகுக்கப்பட்டு தமிழறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு கொண்டுசென்று தீர்வுகள் வழங்கப்படும்.
  6. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்றைய நிகழ்வில் புதிதாக பேசிய ஆங்கில- பிறமொழி வார்த்தைகளையும் அதற்கு இணையாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பரிந்துரைத்த வார்த்தைகளையும் கொடுக்கப்பட்ட google form ல் சேர்த்துவிடவேண்டும். இதை மத்தியக்குழு ஆராய்ந்து எந்த மாதிரியான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறதுஉரையாடிய இணையான தமிழ்ச்சொல் சரியானதுதானாஉள்ளிட்ட ஆய்வுகளை செய்து உரிய வழிகாட்டுதல் செய்வதற்கும் வலைத்தமிழ் இணையத்தில் ஆங்கிலபிறமொழி சொற்களையும் அதற்கு இணையான தமிழ் சொற்களையும் மாதம் ஒருமுறை சேர்க்கப்பட்டு அனைவரும் தேடி பயன்படுத்தும் வசதியுடன் அவை நேர்த்திசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

காணொளிகள்:

https://www.youtube.com/watch?v=bdS0wHcr57M&list=PL8tgK1iIsBIodcc5X0Q8xiDVHPaDzI6ij

"தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" தொடக்கவிழா - காணொளிகள்


தவத்திரு. மருதாசல அடிகளார் வாழ்த்து
https://www.youtube.com/watch?v=3DNkYWVUNsY

திரு. மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி விஞ்ஞானி வாழ்த்து
https://www.youtube.com/watch?v=BYbCFN_BR3o

பாவலர். அறிவுமதி வாழ்த்து
https://www.youtube.com/watch?v=aqhYTmtdg6A

திரு. கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப.(பநி) வாழ்த்து
www.youtube.com/watch?v=quGzIuceUlE

திரு. சி. ராஜேந்திரன், IRS (பநி) வாழ்த்து
https://www.youtube.com/watch?v=yAfNcr7PCIY

திரு. வி.ஜி. சந்தோசம் வாழ்த்து
https://www.youtube.com/watch?v=quGzIuceUlE

முனைவர். சந்திரிகா சுப்பிரமணியன், ஆஸ்திரேலியா வாழ்த்து
https://www.youtube.com/watch?v=pnSg6Lem57Q

திருமதி. கவிதா ஜவகர், பட்டிமன்ற பேச்சாளர் வாழ்த்து
https://www.youtube.com/watch?v=IoZDfV5f3pY

மருத்துவர். சுந்தரேசன் சம்பந்தம் வாழ்த்து
https://www.youtube.com/watch?v=bdS0wHcr57M

பேரா. முனைவர். செ. இரா. செல்வகுமார் வாழ்த்துரை
http://www.youtube.com/watch?v=iFitaHaWLiE

திரு. பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா
https://www.youtube.com/watch?v=JJ3pQS72VSY

திரு. கால்டுவெல் வேள்நம்பி வாழ்த்து
http://www.youtube.com/watch?v=oZBgWlrUOT8

தொடக்கவிழா வரவேற்புரை:
திரு. ச. பார்த்தசாரதி ஆசிரியர், வலைத்தமிழ்
https://www.youtube.com/watch?v=4uZWLkLywZw

தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முன்னெடுக்கலாம்?
திரு.குழந்தைவேல் இராமசாமி
http://www.youtube.com/watch?v=Kw-lu3rj6XY

பேரா. மேகலா ராமமூர்த்தி, வாழ்த்துரை
https://www.youtube.com/watch?v=FlZQT2T3aWU

நோக்க உரை:
திரு. ஆரூர் பாஸ்கர், திரு. ச. பார்த்தசாரதி
http://www.youtube.com/watch?v=7fvJIm_sLZw

தமிழ்ப்பள்ளிகள் எவ்வாறு முன்னெடுக்கலாம்? திரு. விஜயகுமார்
https://www.youtube.com/watch?v=h8Wuy9a8gE8

நன்றியுரை:
திரு. செந்தில்முருகன் வேலுசாமி http://www.youtube.com/watch?v=ycMme6Uo3E0

திருக்குறள் மறையோதல் - அமெரிக்கக் தமிழ் மாணாக்கர்கள்
https://www.youtube.com/watch?v=M2yKb30Lxe0

தமிழ் மொழி பாடல் - இனியா பார்த்தசாரதி
http://www.youtube.com/watch?v=o45TJ_HwBeg

தமிழா! தமிழா! பாடல் - இலக்கியா பார்த்தசாரதி
http://www.youtube.com/watch?v=APoylPxrp3Y

 

"தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" பயிற்சி நடத்த விருப்பமா? இங்கே பதிவுசெய்யுங்கள்.. ஒருங்கிணைப்பாளர் பயிற்சி கொடுத்து வழிகாட்டப்படும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScHoCnGjd-wAhVjV9nlRQl9NU0pg865pmc3TmYP4OXN2g2piw/viewform


4. நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா

கொரோனாவில் முடங்கிப்போன நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்புகாக நிதி திரட்டும் நோக்கிலும், உலகெங்கும் பல நாடுகளில் நிகழ்த்துக்கலை வளர்ச்சிக்கு உழைக்கும் அமைப்புகளை நேர்காணல் செய்து ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஒரு கலைவிழாவாக 25 வாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதை வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை மற்றும் வலைத்தமிழ் இணைந்து தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், கலைஞர்கள், நடிகர்கள், தமிழ்ச்சங்க ஆளுமைகள் என்று பலரையும் அழைத்து சுமார் 15 லட்சம் நிதிதிரட்டி 600க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு பொருளுதவி, நிதியுதவி வழங்கப்பட்டது.

Photos:
https://www.facebook.com/media/set/?vanity=ValaiTamil&set=a.4381312325281474

Article:
https://www.valaitamil.com/protect-the-life-of-folk-artists_19420.html


5. தாய்மொழி ஏன் கற்கவேண்டும்?

அமெரிக்காவின் பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் போகும்போது அங்கு  மாணவர்களுக்கு தொடர்ந்து எழும் கேள்விகளில் ஒன்று "நான் ஏன் தமிழ் படிக்கவேண்டும்?" என்பதாகும். இதை பெற்றோர் கூட்டங்களிலும் , ஆசிரியர் கூட்டங்களிலும் பலமுறை விவாதிப்பார்கள். என்னென்ன காரணங்களைச் சொல்லி அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது? வெளிநாடுகளில் தமிழ்ப்பள்ளியில் இடைநிற்கும் மாணவர்கள், பள்ளிக்கு வர விருப்பமில்லாத மாணவர்களுக்கு எப்படி தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது? 

இதற்குத் தீர்வாக தமிழ்ப்படித்த ஒருவர் மட்டும் சொல்லும் உணர்வுப்பூர்வமான  விளக்கம் மாணவர்களை ஏற்றுக்கொள்ள போதுமானதாக இருக்காது  என்ற பார்வையில்.

தமிழை, தாய்மொழிக்கல்வியை படித்து உலகின் பல துறைகளில் உயர்ந்த நிலையில் உள்ள ஆளுமைகள் ,  மதிப்பு மிக்கவர்கள் , அறிவியலாளர்கள், உலகின் பல பொறுப்புகளில், பல துறைகளில் உள்ள ஆளுமைகளைக்கொண்டு ஆவணப்படுத்தி அவற்றை தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்களுக்கும் ,  ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.

காணொளிகள்: 
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQd8vyLF7sz3qSf1RaEzFqF


6. தகைமைசால் தமிழறிஞர்கள்

உலகெங்கும் பேச்சோடு மற்றும் நின்றுவிடாமல் தமிழாராய்ச்சி , நூல்கள், எழுத்துகள் , கருத்தரங்கங்கள், இதழ்கள் என்று தமிழ் ஆய்வுத்துறையில் தனித்துவமாகத் திகழும் தமிழறிஞர்களை ஆவணப்படுத்தும் " தகைமைசால் தமிழறிஞர்" என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அவர்களின் சிந்தனைகளை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ்சமூகத்திற்கு வலைத்தமிழ் வழியே கொண்டுசென்று தமிழின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை கூர்தீட்டி அதை நோக்கி நகரும் பணியை செய்வது இந்நிகழ்வின் நோக்கமாகும். 
 

இந்தத் தொடர் நிகழ்வை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், அட்லாண்டா நகரத்திலிருந்து திருமதி.ஜெயா மாறன் அவர்களும் , ஓமன் நாட்டிலிருந்து பேராசிரியர் திரு.அரங்கநாதன் அவர்களும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
 

காணொளிகள்:
https://www.youtube.com/watch?v=2y6GmrcKIcM&list=PLXPD1_to_UjRpzTRfaLTGPVEysK5XJHIY


7. உலகத்தமிழ் மாநாடு - வலைத்தமிழ் பங்களிப்பு

உலகத்தமிழ் மாநாடு - வலைத்தமிழ் பங்களிப்பு வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் அச்சடிக்கப்பட்டு மாநாட்டுக்கு வந்திருந்த 3000 விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.


8. பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள்

இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் நூல்களைக்குறித்தும், அவர்களின் உலகளாவிய பயணத்தில் தமிழின் போக்கு குறித்தும் உரையாடி வலைத்தமிழ் பன்னாட்டு இதழில் வெளியிட்டு , வலைத்தமிழ்.டிவி-யில் ஆவணப்படுத்தப்பட்டுவரும் தொடர் நிகழ்ச்சி "பன்னாட்டு எழுத்தாளுமைகள்" . அமெரிக்காவில் உள்ளவர்களைக்கொண்டு "அமெரிக்கத் தமிழ் எழுத்தாளுமைகள்" என்ற நிகழ்வும் நடந்துவருகிறது.

இந்நிகழ்வின் மூலம் , புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின்  நூல்களை , அவர்களின் எழுத்துப் பயணத்தை ஆவணப்படுத்துவது, நூல்களை திரட்டி தமிழ் அமைப்புகளின் விழாக்கள், நூலகங்களின் தமிழ்ப்பகுதிகளில்  வைக்க ஊக்குவிப்பது, அமைப்புகளில் எழுத்தாளர்களுக்கான இணையமர்வை ஏற்படுத்தி சந்திப்புகளை நடத்துவது, அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், சங்கங்கள் படைப்பாளிகளை முறையாக பயன்படுத்த ஊக்குவிப்பது, தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி நூல்களை வெளியிட உதவுவது, தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் புலம்பெயர் எழுத்தாளர்களின் நூல்களை இடம்பெற துணைநிற்பது என்று முடிந்த சில பங்களிப்பை வலைத்தமிழ் தன்னார்வக் குழு செய்ய திட்டமிட்டுள்ளது.  

இத்திட்டத்தை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களும், ஜார்ஜியா, அட்லாண்டாவிலிருந்து திருமதி.பிரதிபா பிரேம்குமார் அவர்களும், சௌதி அரேபியாவிலிருந்து முனைவர்.பாக்யலட்சுமி வேணு அவர்களும் ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjSWpyUrd62wPltpOa8Zaivu


9. குழந்தைகளைக் கொண்டாடுவோம்:

"குழந்தைகளைக் கொண்டாடுவோம்" நிகழ்வின் வழியே சிறுவர் இலக்கியம், சிறுவர் செயல்பாடுகள் சார்ந்த அனைவரையும் அழைத்து நேர்காணல் செய்து பெற்றோர்களுக்கும், தமிழ் சிறுவர் இலக்கிய உலகிற்கும் அவர்களின் பங்களிப்புகளை , திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சியே இந்த நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியை அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலிருந்து திருமதி. கார்த்திகைபிரியா அவர்களும், மிச்சிகன் மாகாணத்திலிருந்து திருமதி. பிரவீனா ராஜரத்தினம் அவர்களும் தொகுத்து வழங்கிவருகிறார்கள்.

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ9zp5y61Fo0aEQyCBZjPWv


10. சிறுவர் கதைகள்

கதைகள் வழியாகவே வாழ்வியல் கருத்துகளைஒழுக்கத்தை அன்பைஉறவுகளைநெறிகளைநீதிபோதனைகளைகற்பனை செய்யும் வித்தையை கடத்திய தமிழ்ச்சமூகம் இன்று கூட்டுக்குடும்ப வாழ்வியல் முறைகளை விடுத்தும்பொருளாதாரத் தேடல்வேலை என்று பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்தும், குழந்தைகள் தாத்தா-பாட்டிகளிடம் கதை கேட்க வாய்ப்பில்லாத நிலையில் பயணிக்கிறது. இந்நிலையை உணர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைசொல்லும் ஒரு முயற்சியாக "வலைத்தமிழ் கிட்ஸ் கிளப்" என்ற ஒன்றை உருவாக்கி கதைசொல்லிகளை அழைத்து நூற்றுக்கணக்கான கதைகளை ஆவணப்படுத்தி பகிர்ந்துள்ளோம். மேலும். கதைசொல்லும் உத்தியை பெற்றோர்களுக்கும் சொல்லிக்கொடுக்க கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்துவருகிறோம்.

மேலும், வலைத்தமிழ் சிறுவர் கதைகளுக்கென்று சிறப்பான ஒரு செயலியை உருவாக்கி வெளியிட்டும் , தினம் ஒரு கதைகளை பகிர்ந்தும் வருகிறது.

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTd4nnzRlxARVLoaUkqT8g1


11. தமிழிசை

முத்தமிழில் தமிழிசை பல்வேறு வளர்ச்சிகளை கண்டு, மக்கள் பயன்பாட்டில் வருவது  தமிழிசை ஆய்வுக்கும், மேடை நிகழ்ச்சிகளுக்கும் , இசைவளர்ச்சிக்கும் இன்றியமையாதது. 

வலைத்தமிழ் அறக்கட்டளை, இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களை முதல்வராகக்கொண்டு வலைத்தமிழ் கல்விக்கழகத்தை தொடங்கி,உலகெங்கும் பல நாடுகளில் வாழும் மாணவர்கள் தமிழிசையை கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் , மார்கழி இசைவிழா, கோடைகாலப் பயிற்சிப்பட்டறை, நவராத்திரி விழா என்று பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழிசையைப்பாட வாய்ப்பாக நடத்திவருகிறது.

இதனால் உலகெங்கும் உள்ள அனைத்து வயதினரும் இசையை கற்க எளிய வழி ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளிக்கும் இலவச தமிழிசைப் பயிற்சியை வழங்கி அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை கொண்டுசெல்ல முயற்சிகள் தொடர்கிறது..

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjRiXCTst6F4XPuvzoneNkOg
159 videos


12. கற்றனைத்தூறும் அறிவு

தமிழில் சிறுவர் இலக்கியங்களுக்காக எழுத்தாளர்கள் மிகுந்திருந்த காலக்கட்டங்கள் உண்டு. மக்கள் பொருளாதார வளம் குன்றிய காலத்தில், பல நூல்கள் சிறுவர்களுக்கு வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று பொருளாதாரம் வளர்ந்திருந்தாலும், தன் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்கொடுக்கும்  திறனுடைய பெற்றோர்கள் அதிகரித்திருந்தாலும், சிறுவர் இலக்கியங்களை எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துவிட்டனர். எனவே சிறுவர் எழுத்தாளர்களை  ஆவணப்படுத்தி, அவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் "கற்றனைத்தூறும் அறிவு" என்ற தொடர் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலிருந்து திருமதி. பிரவீனா இராஜரத்தினம் அவர்கள் நெறியாள்கை செய்துவருகிறார்.

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjThfOxMQ86Ct-5zqzwLDcWO


13. வையத் தலைமைகொள்

தமிழர் வரலாற்றில் ஆண்களும், பெண்களும் சமமான நிலையில் வாழ்ந்தவர்கள். தமிழிலக்கியத்தில் பல பெண்பால் புலவர்கள், சிந்தனையாளர்கள் இருந்துள்ளதை நாம் அறிவோம். இன்றைய பொது வாழ்வில் பெண்கள் இடையில் ஏற்பட்ட தொய்வுகளைத் தாண்டி மெல்ல முன்னேறி பல துறைகளில் தங்களை தடம்பதித்து வருகிறார்கள். அப்படி இலக்கியம், சமூக வாழ்வியல், அரசியல், தொழில், ஊடகம், எழுத்து என்று பல துறைகளில் முன்னேறி முன்னுதாரணமாகத் திகழும் உலகத் தமிழ் பெண் ஆளுமைகளை அடையாளம் கண்டு நேர்காணல் செய்து, வளர்ந்து வரும் பெண்களுக்கு, இளைஞிகளுக்கு நம்பிக்கையை, ஆளுமைத்திறனை  ஏற்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தி வருவது இந்நிகழ்ச்சியின் நோக்கம். 

இந்நிகழ்ச்சியை அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலிருந்து திருமதி.சுபா காரைக்குடி ஒருங்கிணைப்பு செய்கிறார்.

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ6xegW5ulSJ8YUkaz3yyu3


14. எங்கள் குலதெய்வம்

தமிழ் சமூகத்தில் மரபைக்  காக்க, ஒற்றுமையை வலுப்படுத்த , உறவுகளைப் பேண , பகைமையை குறைக்க  , அமைதியை ஏற்படுத்த, நம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையுடனும், கொண்டாட்ட மனோபாவத்துடனும் மகிழ்ச்சியாக  இருக்க , கிராமப்புற வாழ்வியலை வலுப்படுத்த "எங்கள் குல தெய்வம்" என்ற முயற்சி தொடங்கப்பட்டு குலதெய்வக்  கோயில்களை ஆவணப்படுத்துவதும், ஊக்குவிப்பதும், இதன்மூலம்  இளையோருக்கு , படித்தவர்களுக்கு தாங்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளிலும் குலதெய்வ வழிபாட்டை உள்ளடக்கி பயணிக்கவேண்டும் என்ற நம்பிக்கையை விதைப்பதும் நோக்கம்.


15. தமிழ் எழுத்துப்பிழை திருத்தி / மென்பொருள் வடிவமைப்பு. 

நாவி என்ற ஒற்றுப்பிழை திருத்தியை உருவாக்கிய கணிணித்தமிழில்  தொடர்ந்து இயங்கிவரும் நீச்சல்காரனின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும், தமிழ் சமூகத்தின் பயன்பாட்டிற்கு பரவலாக கொண்டுசேர்க்கவும்  தமிழில் எழுத்துப்பிழை  திருத்தி ஒன்றை உருவாக்கிட ஊக்கம் கொடுத்தும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், புரவலராக இருந்தும்  "வாணி"  என்ற திருத்தியை அறிமுகம்செய்துள்ளோம். 

இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் www.VaaniEditor.com என்ற தளத்தை உருவாக்கி பதிப்புலகிற்கும் , பொதுமக்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், தமிழ் பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் API உள்ளிட்ட வசதிகளுடன் இதை மேம்படுத்தி வெளியிடுவதில் பெருமைகொள்கிறோம்.

நீச்சல்காரன் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆய்வுகள் அடிப்படையில் மேலும் பல தமிழ் சார்ந்த மென்பொருள்களை  வடிவமைக்கவும், பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.


16. வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்:

தமிழ்நாட்டில் பிறந்து உலகின் பல நாடுகளுக்குச் சென்று தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் தான் பிறந்த மண்ணுக்கு திரும்பி செலுத்தவேண்டும் கடனை உணர்ந்து குறிப்பிடத்தக்க சில சமூகப்பணிகளை, உதவிகளை, அறிவுப்பகிர்வை, திட்டத்தை முன்னெடுக்கும் பலரை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி , தமிழ் சமூகத்திற்கு அவர்களின் செயலை அறிவித்து அதை பலரும் பின்பற்ற காரணமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் "வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்" என்ற இந்த நிகழ்வு.

இந்நிகழ்ச்சியை அமெரிக்காவிலிருந்து திருமதி.சிவச்சித்ரா அசோகன் நெறியாள்கை செய்துவருகிறார்.

காணொளிகள்:
https://www.youtube.com/watch?v=n-3HO0WKqNw&list=PLXPD1_to_UjQqw5akTSChnD2d6TYVXo4w


Thirukkural Related Projects

17. Thirukkural for UNESCO

ValaiTamil joined hand with International Thirukkural Foundation (Mauritius) , Tamil Valarchi Mandram (Australia), Valluvar Kural Kudumbam (India) to take Thirukkural to UNESCO to declare Thirukkural as a World book. As part of this initiative, series of English Seminars are conducted by inviting international scholars to strengthen the mission that align with “Thirukkural and UNESCO for World Peace. “

Project Team:

Chair:
Dr. Armoogum Parsuramen, President
International Thirukkural Foundation
Former Director, UNESCO
Former Education Minister , Mauritius

Team:
*
Chandrika Subramanian ,Founder , Tamil Valarchi Mandram, Australia
C.Rajendiran, IRS (Retd.) , Founder & Co-ordinator , Voice of Valluvar Family
Sa.Parthasarathy, Founder & Director , ValaiTamil.com, ValaiTamil Fundation

Photos:
https://www.facebook.com/media/set/?vanity=ValaiTamil&set=a.4328552897224084

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTrbpPhhoSCXFEHLw05MRi8


18. எனைத்தானும் நல்லவை கேட்க (Thirukkural Scholars / Folowers Interview series)

வலைத்தமிழ், வள்ளுவர் குறள் குடும்பத்துடன் இணைந்து, திருக்குறள் கருத்துகளை முழுமையாக உள்வாங்கி வாழ்வில் பின்பற்றிவரும்  100 திருக்குறள் ஆளுமைகளை நேர்காணல் செய்து ஆவணப்படுத்தி பரப்பும் திட்டமாக "எனைத்தானும் நல்லவைக் கேட்க " என்ற தொடர் நிகழ்வு தொடங்கப்பட்டது. வலைத்தமிழின் இந்த நீண்டநாள் தொடர் முயற்சி வள்ளுவர் குறள் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் IRS (ஓய்வு), மற்றும் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் , செயின்ட் லூயிஸ் வசிக்கும் திருக்குறள் ஆர்வலர் திரு. இளங்கோ அவர்களும் நெறியாள்கை செய்து, ஒருங்கிணைத்து இதை வெற்றிகரமாக்கி தமிழ் சமூகத்தில் ஒரு மிகப்பெரிய பெட்டகமாக  இந்தத் திருக்குறள் காணொளி ஆவணம்  விளங்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

புகைப்படம் :
https://www.facebook.com/media/set?vanity=ValaiTamil&set=a.4324276954318345

காணொளிகள்:
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTMt8UGwtIytLXFxNvW1y9T


19. திருக்குறள் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் வார்த்தைகள் கூகுளில் தேடும்போது முதலில் வரும் வகையில் வலைத்தமிழ் மக்களிடம் சென்றடைந்துள்ளது. (For past 12 years of continuous Thirukkural promotion, Google brings ValaiTamil as a first site in global search engine).

உலகில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ் அமைப்புகள் , ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் திருக்குறள் தேடும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு 62 நாடுகளிலிருந்து 19 லட்சம் பேர் 2020-ல் பயன்படுத்தியுள்ளார்கள் . கூகுள் தேடலில் முதலாவதாக வரும் வகையில் இடம்பெற்றுள்ளது கடந்த 12 ஆண்டுகால தமிழ் சேவைக்கு கிடைத்த முக்கியத்துவமாகும்.


20. உலக மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் திட்டம்

திருக்குறள் வெளிவந்துள்ள பிறமொழி மொழிபெயர்ப்புகளைத் தொகுப்பதற்காக வலைத்தமிழ் உருவாக்கியுள்ள நூல் தொகுக்கும் குழுவில் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும்  திருக்குறள் ஆர்வலர், திரு.இளங்கோ தங்கவேலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளின் நூலகங்கள், தமிழ்ச்சங்கங்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,   தமிழறிஞர்களைத் தொடர்புகொண்டு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள்  குறித்த விவரங்களைத் திரட்டி நூல்களைச் சென்னைக்கு அனுப்பிவருகிறது. இதில் வள்ளுவர் குறள்  குடும்பமும் இணைந்து முழுமையாக தேடும் , தொகுக்கும் பணியை விரைவுபடுத்தியுள்ளது.  (ValaiTamil formed an International Team to get all Thirukkural Translated books in hard copy form and sent to ValaiTamil India or USA office locations)


21. 1330 திருக்குறளுக்கும் ஓவியத்துடன், ஒலி , குறள் விளக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும்.   (1330 Thirukkural is compiled in all kind of technical farms to serve global community):


22. திருக்குறள் செயலிகள்

வலைத்தமிழ் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தை சார்ந்த புரவலர் திரு.சுரேஷ் கணேசன் அவர்களுடன் இணைந்து ஒவ்வொருவரும் ஒன்றரை லட்சம் நிதியளித்து இரண்டு மேம்பட்ட திருக்குறள் செயலிகளை (Mobile Apps) முறையாக தமிழ் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து 2017-ல் iphone, Android செயலிகளாக வெளியிடப்பட்டது. (ValaiTamil Team released two powerful mobile apps with strong architecture to meet global needs)

a. App Name: Thirukkural Audio (Android , iPhone)
Published in Feb, 2017 and downloaded and used by 50000+ users.
Search by ValaiTamil to get this app or use this link to download: https://play.google.com/store/apps/details?id=com.fmt.thirukuralaudio

b. App Name: Kural (Android , iPhone) -  Published in Feb,2017.

https://play.google.com/store/apps/details?id=com.fmt.thirukuralaudio


23. திருக்குறள் கட்டுரைகள், ஆய்வுகள் தொகுப்பு:

திருக்குறளுக்கு ஒரு சிறப்புப் பகுதியை வலைத்தமிழ் இலக்கியம் பகுதியில் உருவாக்கி அங்கு அனைத்து திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் , நேர்காணல்கள் , செய்திகள் , கருத்தரங்கங்கள் அனைத்தும் தொகுக்கப்படுகிறது. (ValaiTamil is collecting and organizing thirukkural related regular and research articles in various topics)

URL : https://www.valaitamil.com/literature_thirukkural


24. திருக்குறள் விளக்கவுரை காணொளி :

ஒவ்வொரு திருக்குறளுக்குமான விளக்க உரைகளை தொகுக்கும் திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 1330 திருக்குறளுக்கும் தரமான உரைகள் , பல கோணங்களில் , பல நாடுகளிலிருந்து, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் பயணம் தொடர்கிறது. ( ValaiTamil launched a global project to capture explanation with simple and current scenario example in English and Tamil for each kural for 5 minutes)

காணொளிகளைக் காண: https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjT8G9YCpeewLmkpI2zhqO2-


25. திருக்குறள் மறையோதல்

அமெரிக்காவின் பனை நிலம் தமிழ்ச்சங்கம் இசையுடன் உருவாக்கியுள்ள திருக்குறள் மறையோதலை காணொளியாக ஆவணப்படுத்தி ஒவ்வொரு குறளுடன் இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. (Thirukkural with music is documented by Panai Nilam Tamil Sangam Team and ValaiTamil Joined with them to bring that as a practice to chant 10 kurals during the inauguration of any Tamil Event).

காணொளிகளைக் காண: https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjRcIQettH-O1aa8VB1u34LO


26. மாவட்ட அளவில் 1330 திருக்குறளை முற்றோதல் செய்து அரசின் ரூபாய் 10000 மற்றும் சான்றிதழ் பெற இலவசப் பயிற்சி:

வலைத்தமிழ் அறக்கட்டளை, வள்ளுவர் குறள் குடும்பம் மற்றும் Service 2 Society ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 1330 திருக்குறளை படித்து , உள்வாங்கி ஒப்பிக்கும் திருக்குறள் முற்றோதல் இலவசப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது எளிதான, எல்லோராலும் செய்துமுடித்துவிடக்கூடிய செயல் இல்லை என்பதால் , இதற்கு முறையாக பயிற்சி கொடுக்க, கடந்தகாலங்களில் மாணவர்களை வெற்றிபெறச் செய்துள்ள எட்டு பயிற்சியாளர்களை தமிழகமெங்கும் அடையாளம் கண்டு , அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் என்று ஐந்து மாவட்டங்களுக்கு குறைந்தது 500 மாணவர்களை அடையாளம் கண்டு பயிற்சியளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு வலைத்தமிழ் அறக்கட்டளை மற்றும் Service 2 Society நடத்தும் "தனித்துவமிக்க தலைமையாசிரியர்" , "ஆற்றல்மிகு ஆசிரியர்" நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஓர் ஆண்டில் 100 பேர் திருக்குறள் முற்றோதல் செய்தல் என்று தொடங்கி , 2026-ல் மாவட்டத்திற்கு 1000 பேர் வரை முற்றோதல் செய்து அவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை பயிற்சி என்று அனைத்து வகையிலும் கைபிடித்துவிட்டு ஒழுக்கம் நிறைந்த, அறம் சார்ந்த, பொதுநலன் உள்ள , தலைப்பண்புகள் உள்ள சிறந்த குடிமகனை உருவாக்கும் பொறுப்பு மிக்க பணியாக இது அமையும் என்பது எமது நம்பிக்கை. 

தனி மனித ஒழுக்கம் , தலைமைப்பண்பு, நட்பு, ஈகை என்று வாழ்வின் வெற்றிக்கு பல்வேறு கூறுகளை திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்கள் வளர்ந்து வரும் பருவங்களுக்கு ஏற்ற புரிதலுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், பொறுப்புடனும் எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.